இலங்கை

இந்திய படகுகளின் அத்துமீறல்களை கண்டித்து ஜனாதிபதிக்கு தபாலட்டை அனுப்பி வைப்பு!

Published

on

இந்திய படகுகளின் அத்துமீறல்களை கண்டித்து ஜனாதிபதிக்கு தபாலட்டை அனுப்பி வைப்பு!

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த கோரி கையெழுத்திடப்பட்ட தபாலட்டைகள் இன்று (21) ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை 21 சர்வதேச மீனவர் தினமாகிய இன்று சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் (ECDO) ஏற்பாட்டில் இந்திய இழுவைப் படகுகளை இலங்கை கடற்பரப்பிற்குள் வரவிடாது தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கோரிய தபாலட்டைகள் முல்லைத்தீவு மக்கள்மற்றும்  முல்லைத்தீவு மீனவர்களினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இன்றைய மீனவர் தினத்தில் இலங்கை முழுவதுமாக விஷேடமாக முல்லைத்தீவு மாவட்டம் இந்திய மீனவர்களுடைய இழுவை படகுகளினுடைய அத்துமீறல்களும் முல்லைத்தீவு கடற்பரப்பில் காணப்படுகின்ற கடற் திரவியங்கள் அனைத்தும் இந்திய இழுவை படகுகள் மூலமாக அபகரித்து செல்லுகின்ற துர்ப்பாக்கிய நிலை அதிகமாக காணப்படுகின்றது. 

இந்நிலையில் இலங்கையினுடைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவிற்கு முல்லைத்தீவு மக்கள் மற்றும்  முல்லைத்தீவு மீனவர்களினால் பெயர் முகவரி பொறிக்கப்பட்டு கையெழுத்திடப்பட்ட தபாலட்டையினை அனுப்பி வைக்கும் முகமாக இன்று500 ற்கும் மேற்பட்ட தபாலட்டைகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version