சினிமா
என்னது கங்குவா இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா? வைரலாகும் வீடியோ
என்னது கங்குவா இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா? வைரலாகும் வீடியோ
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. பாண்டஸி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.வருகிற 14ஆம் தேதி கங்குவா படம் வெளிவரவிருக்கும் நிலையில், படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நெட்டிசன்கள் சில விஷயங்களை சமூக வலைத்தளத்தில் செய்து வருகிறார்கள்.கங்குவா படம் ஹாலிவுட்டில் வெளிவந்த பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் காப்பியா என கூறி, வீடியோ ஒன்றை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.கங்குவா ட்ரைலரில் வரும் காட்சிகளையும், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் வரும் காட்சிகளையும் ஒப்பிட்டு இப்படி செய்துள்ளனர். இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..