விளையாட்டு
கஜகஸ்தானை வீழ்த்திய இந்தியா! ஆசிய கோப்பை போட்டி வாய்ப்பு பிரகாசம்!
கஜகஸ்தானை வீழ்த்திய இந்தியா! ஆசிய கோப்பை போட்டி வாய்ப்பு பிரகாசம்!
கூடைப்பந்து போட்டியில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு கஜகஸ்தான் அணியை 88-69 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தது இந்தியா.
ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்றில் இரண்டு போட்டிகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. கத்தார் அணியுடன் தோல்வியடைந்த இந்தியா, கஜகஸ்தான் அணியுடன் விளையாடியது. முதல் பாதி ஆட்டநேர முடிவில் 37-33 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது.
தொடர்ந்து இரண்டாவது கால் பாதியிலும் இந்திய அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. கத்தார் அணிக்கு எதிராக ரீ பவுண்ட் எடுக்கத் திணறிய இந்திய வீரர்கள் இந்தப் போட்டியில் அதிக ரீ பவுண்டுகள் எடுத்ததன் மூலமாக எதிரணியின் கவுண்டுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடிந்தது.
ஆட்டத்தின் இறுதி கால்பாதியிலும் இந்தியாவின் வேகத்தை கஜகஸ்தான் அணியால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இறுதியில் 88-69 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றியைப் பதிவு செய்தது இந்திய அணி. முதல் போட்டியில் கத்தார் அணியிடம் அடைந்த தோல்விக்கு கஜகஸ்தான் அணியிடம் பழிதீர்த்துக் கொண்டது இந்திய அணி.
இதையும் படியுங்கள் :
IPL Auction 2025 : ஏலத்தில் வாங்கப்பட்ட 20 வீரர்கள்…. சென்னை அணியின் முழு பட்டியல் இதுதான்…
ஆசிய கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் குரூப் ஈ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி முதல் வெற்றியை ருசித்தது மட்டுமல்லாமல் நான்கு போட்டிகளிலும் சேர்த்து 244 புள்ளிகள் குவித்ததன் காரணமாக கஜகஸ்தான் அணியை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.