சினிமா
கட்டாய வெற்றியை நோக்கி சூர்யா! பூஜையுடன் தொடங்கியது ‘சூர்யா 45’ படப்பிடிப்பு!
கட்டாய வெற்றியை நோக்கி சூர்யா! பூஜையுடன் தொடங்கியது ‘சூர்யா 45’ படப்பிடிப்பு!
பிரபல நடிகர் சூர்யா கடைசியாக தனது நடிப்பில் கங்குவா திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 45’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க உள்ளார். 19 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சூர்யா-திரிஷா இணைந்து நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானது.இந்த நிலையில், இப்படத்தின் முற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கோவையில் தொடங்க உள்ளது. அதற்காக படக்குழுவினர் இன்று மாசாணியம்மன் கோவிலில் வழிபாடு செய்துள்ளனர். அடுத்ததாக, முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நாளை தொடங்க உள்ளதாகவும், சுமார் 35 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பூஜையில் கலந்து கொண்ட நடிகர் சூர்யாவின் விடீயோக்கள் வைரலாகி வருகிறது.