டி.வி

காசு விஷயத்தில் கையும் களவுமாக மாட்டிய மனோஜ்.. பரபரப்பான திருப்பத்தில் சிறகடிக்க ஆசை

Published

on

காசு விஷயத்தில் கையும் களவுமாக மாட்டிய மனோஜ்.. பரபரப்பான திருப்பத்தில் சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களுள் ஒன்று தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம். ஏற்கனவே இந்த சீரியலில் சத்யாவின் பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, விஜயாவுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வக்கீல் கொடுக்கின்றார். அதனை பார்வதி ரோகிணி இடம் சொல்லி விடுகின்றார். d_i_aஇதை தொடர்ந்து பிஏயின் நிலைமை மோசமாக இருப்பதாக சிட்டி ரோகிணியை மிரட்டிக்கொண்டு இருக்க வேறு வழி இல்லாமல் பார்வதியிடம் இருந்து பணத்தை ஆட்டையை போடுகின்றார் ரோகினி. அதன் பின்பு அந்த பழி மீனாவின் மீது விழுவதாக காட்டப்பட்டது.இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில், மனோஜ் உடன் டீல் வைத்த சந்தோஷ் சார் அவர்களுடைய கடைக்கு விளம்பரப்படுத்துவதற்காக மொத்தமாக 2 லட்சம் ரூபாய் கொடுத்து நடிக்க சொல்கின்றார். ஆனால் மனோஜ் ரோகினியும் நமது கடைக்காக நடித்துக் கொடுக்குமாறு கேட்கின்றார்கள்.இருந்தபோதும் ஸ்ருதி நடிக்க வந்தவர்களுக்கு பேமென்ட் கொடுக்கணும் தானே என்று கேட்கின்றார். அதன் பின்பு கடையில் வைத்து விளம்பரப்படுத்துவதற்காக ஒவ்வொருவரும் நடித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு இருந்த டைரக்டர் சரியா நடிக்க  வில்லை என்று சொல்லுகின்றார். இதனால் கோபப்பட்ட முத்து போனா போகுது என்று ஓசில நடிக்க வந்தா ஓவராக பண்ணுறீங்க என திட்டுகிறார்.இதை கேட்ட டைரக்டர் சந்தோஷ் ஒரு ஆளுக்கு 25 ஆயிரம் படி இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார் என்ற உண்மையை போட்டு உடைக்கின்றார். இதனால் மனோஜ் கையும் களவுமாக  மாட்டுப்படுகின்றார். அதன் பின்பு இறுதியாக வீட்டார்கள் முன்னிலையில் மனோஜ் தலை குனிந்து நிற்கின்றார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version