இலங்கை
கொல்லவிளாங்குளம் பகுதியில்: இராணுவத்தால் வீடு கையளிப்பு!
கொல்லவிளாங்குளம் பகுதியில்: இராணுவத்தால் வீடு கையளிப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொல்லவிளாங்குளம் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றிற்கு இலங்கை இராணுவத்தால் புதிய நிரந்தர வீடு ஒன்று கட்டி கையளிக்கப்பட்டுள்ளது
இலங்கை இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு கையளிக்கும் நிகழ்வு நேற்று (06) காலை இடம்பெற்றது
மிகவும் அழகிய வீட்டின் திறப்பினை இலங்கை இராணுவத்தின் 56 ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் கஸ்தூரி முதலி நாடாவை வெட்டி வீட்டினை திறந்து வைத்து வீட்டு திறப்பினை உரிமையாளரிடம் கையளித்தார்
சமய சம்பிரதாய முறைப்படி இடம்பெற்ற வீடு கையளிக்கும் நிகழ்வில் 561 ஆவது படைப்பிரிவு கட்டளை தளபதி உள்ளிட்ட இராணுவ உயர் அதிகாரிகள் கிராம அலுவலர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். (ப)