சினிமா

சத்தமே இல்லாமlல் அமரன் செய்யும் வசூல் வேட்டை!! விஜய், ரஜிக்கு பின் சிவகார்த்திகேயன் தான்..

Published

on

சத்தமே இல்லாமlல் அமரன் செய்யும் வசூல் வேட்டை!! விஜய், ரஜிக்கு பின் சிவகார்த்திகேயன் தான்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உண்மை கதையை வைத்து எடுக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த திரைப்படம் அமரன். கடந்த அக்டோபர் 31ஆம் தேதி உலகளவில் வெளியாகியுள்ளது அமரன் படம்.இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உலகநாயன் கமல் ஹாசன் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.இப்படத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.படம் ரிலீஸான முதல் நாளில் 42.3 கோடி வசூல் செய்து சாதனைப்படைத்திருந்தது. இதனையடுத்து இரண்டாம் நாளில் 19.2 கோடி வசூலித்து உலகளவில் மொத்தம் 68 கோடி வசூலித்தும் தமிழ்நாட்டில் 31 கோடியும் வசூலித்திருக்கிறது.இன்னும் இரு நாட்களில் 100 கோடி வசூலை வசூலித்து அடுத்த விஜய், ரஜினி இடத்தினை சிவகார்த்திகேயன் இப்போதே பிடித்துவிட்டார் என்று நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version