சினிமா

சீனாவில் மண்ணைக் கவ்விய மகாராஜா.. படு மோசமான வசூல் நிலவரம்

Published

on

சீனாவில் மண்ணைக் கவ்விய மகாராஜா.. படு மோசமான வசூல் நிலவரம்

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் மகாராஜா. தந்தை மகளுக்கு  இடையிலான பந்த பாசத்தை மிகவும் எமோஷனலாகவும் தன் மகளுக்கு நடந்த அநீதியை தட்டிக் கேட்கும் ஒரு சாதாரண தந்தையின் எதார்த்தமான வாழ்க்கையை மிக அழகாக இந்த படத்தில் எடுத்துக் காட்டி இருப்பார்கள்.விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லன், குண சித்திர கேரக்டர் என எது கொடுத்தாலும் அதில் ஸ்கோர் செய்யும்  பிரபல நடிகராக காணப்படுகின்றார். இவருடைய ஐம்பதாவது திரைப்படமாக மகாராஜா திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் விஜய் சேதுபதி உடன் அனுராக் காஷ்யப், நட்டி நடராஜன், மம்தா மோகனதாஸ், அபிராமி, சிங்கம்புலி, முனிஷ்காந்த், சாச்சனா ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.d_i_aதமிழில் வெளியாகி 100 கோடி ரூபாயை கடந்த மகாராஜா திரைப்படம் ஓடிடி தளத்திலும் சக்க போடு போட்டது. அதன் பிறகு பிற மொழிகளிலும் இந்த படத்தை ரீமேக் செய்தார்கள்.இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் சீனாவில் மட்டும் 40 ஆயிரம் தியேட்டர்களில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. ஆனாலும் இரண்டு நாட்களில் 2. 15 கோடிக்கு மேல்தான் வசூலித்துள்ளதாம். சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் மகாராஜா வெளியான போதும் எதிர்பாராத வசூலை எடுக்க முடியாமல் டல் அடித்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version