சினிமா
ஜெயம் ரவி- நித்யா மெனனின் “காதலிக்க நேரமில்லை” படத்தின் போஸ்டர் வெளியானது…!
ஜெயம் ரவி- நித்யா மெனனின் “காதலிக்க நேரமில்லை” படத்தின் போஸ்டர் வெளியானது…!
நடிகர் ஜெயம் ரவி கடைசியாக பிரதர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த 31ம் திகதி தீபாவளி முன்னிட்டு வெளியாகி இருந்தது. அந்த திரைப்படத்துடன் லக்கி பாஸ்கர், அமரன் உள்ளிட்ட படங்கள் ரிலீசாகவே படம் கொஞ்சம் வசூலில் அடிவாங்கியது. மேலும் ஜெயம் ரவியின் படங்கள் தோல்வியை தந்தவண்ணம் இருக்க வாழ்க்கையிலும் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க என்ன நடந்தாலும் கெரியரை விடமாட்டேன் என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மெனன் நடிப்பில் உருவான திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. இதில் ஜெயம் ரவி, நித்யா மெனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, டி.ஜே. பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரசிகர்ளுக்கு விருந்தளிக்கும் வகையில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று தற்போது ரிலீசாகி இருக்கிறது. அதில் அருமையான அறிவிப்பு உள்ளது காத்திருங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.