இலங்கை

தண்ணிமுறிப்பு குளத்தினை பாதுகாக்கும் முன்னாயத்த ஏற்பாடுகள் முன்னெடுப்பு!

Published

on

தண்ணிமுறிப்பு குளத்தினை பாதுகாக்கும் முன்னாயத்த ஏற்பாடுகள் முன்னெடுப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்காத வகையில் அதனை பாதுகாக்கும் முன்னாயத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உள் பக்கமாக சில இடங்களில்  அரிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அணைக்கட்டு, குளத்தை பாதுகாப்பதற்காக தற்காலிகமாக மண்மூடைகள் போடப்பட்டு, பாதுகாப்பு வேலி அமைக்கும் வேலைத்திட்டத்தை நீர்ப்பாசனத் திணைக்களத்தினர் இராணுவத்தினரோடு இணைந்து பாதுகாக்கும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

தண்ணிமுறிப்பு குளமானது 21 அடி வரை நீரை சேமிக்க கூடியதாக இருக்கின்ற நிலையில் தற்போது 14.6அடி  வரை  நீர் மட்டம் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version