சினிமா
தலைவர் நடிப்பில் கூலி…! லோகேஷ் இயக்கம் பற்றி நாகார்ஜுனா சொன்ன கருத்து!
தலைவர் நடிப்பில் கூலி…! லோகேஷ் இயக்கம் பற்றி நாகார்ஜுனா சொன்ன கருத்து!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார். இவர் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கூலி படத்தினை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் , நாகார்ஜுன, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னதாக இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று .இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நாகார்ஜுனா, லோகேஷ் கனகராஜுடன் பணிபுரிவது குறித்து பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்.’ஒரு புதிய வடிவிலான பட இயக்கத்தை அவரிடத்தில் நான் பார்க்கிறேன். அந்த புதிய வடிவம் கதாபாத்திர வடிவமைப்பிலும், திரைக்கதையிலும் இருக்கும். அவர் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கும்போது ஒரு சுதந்திரம் இருக்கிறது.ஒரு ஹீரோ இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். வில்லன் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்ற எந்த விதியும் அவரிடத்தில் கிடையாது’ என்று கூறினார். இந்த திரைப்படமானது அடுத்த வருடம் மே முதலாம் வெளியாக உள்ள நிலையில் அதன் படப்பிடிப்புகளில் ஈடுபட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.