சினிமா

நாக சைதன்யாவின் திருமண உரிமையை பல கோடிகள் கொடுத்து கைப்பற்றிய நிறுவனம்?

Published

on

நாக சைதன்யாவின் திருமண உரிமையை பல கோடிகள் கொடுத்து கைப்பற்றிய நிறுவனம்?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நாகர்ஜுனா. இவருடைய மூத்த மகன்   நாக சைதன்யாவும் பிரபல நடிகராக காணப்படுகின்றார். இவர் 2017 ஆம் ஆண்டு சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் இவர்களுடைய திருமண வாழ்க்கை நீடிக்க வில்லை. நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.நடிகை சமந்தாவை பிரிந்ததாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலா மீது காதல் கொண்டார். இவர்கள் வெளிநாடுகளில் டேட்டிங் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலான போதும் அது தொடர்பில் மௌனம் காத்தார்கள். அதன் பின்பு திடீரென இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.d_i_aகடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் தங்களுடைய காதலை ரகசியமாக வைத்திருந்த போதிலும் கடந்த ஆகஸ்ட் மாதம் குடும்பத்தார் முன்னிலையில் அனைவருடைய சம்மதத்துடனும் நிச்சயம் செய்து கொண்டார்கள். இந்த தகவலை அதிகாரபூர்வமாகவே நாகர்ஜுனா அறிவித்திருந்தார்.இவர்களுடைய திருமணம் எதிர்வரும் டிசம்பர் நான்காம் தேதி நடைபெற உள்ளதாக இப்போது இருந்தே அதற்கான ஏற்பாடுகள் களை கட்டி வருகின்றன. இந்த திருமணத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளார்கள்.இந்த நிலையில், நாக சைதன்யா – சோபிதா துலிபாலாவின் திருமண ஒளிபரப்பு உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அதுவும் 50 கோடி ரூபாய் கொடுத்து இவர்களுடைய திருமணத்தை ஒளிபரப்பு செய்ய உரிமை கேட்டு வாங்கியுள்ளதாம். இந்த தகவல் பலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version