சினிமா

நாலு பேரு கூட போய் சம்பாதின்னு என் வீட்டுக்காரு சொன்னாரு!! சீரியல் நடிகை ரிஹானா ஓப்பன் டாக்..

Published

on

நாலு பேரு கூட போய் சம்பாதின்னு என் வீட்டுக்காரு சொன்னாரு!! சீரியல் நடிகை ரிஹானா ஓப்பன் டாக்..

தமிழ் சின்னத்திரையில் நாயகன்-நாயகியாக நடிப்பவர்களை தாண்டி துணை கதாபாத்திரங்கள், அம்மா, அக்கா, தங்கை என நடிப்பவர்கள் கூட இப்போது மக்களிடம் பிரபலம் ஆகிவிடுகிறார்கள். அப்படி பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிஹானா.அண்மையில் ஒரு பேட்டியில், 16 வயதில் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க் ஆரம்பிச்சு, 16 வயதிலேயே நிச்சயம் நடந்தது. 18 வயதில் கல்யாணம் செய்து 19 வயதில் குழந்தை பிறந்தது. 24 வயதுக்குள் இரண்டு குழந்தைகலுக்கு அம்மா ஆகிவிட்டேன். என் வீட்டுக்காரர் ரொம்ப நல்ல மனிதர், எந்த பெண்களிடமும் பேசமாட்டார், என் தங்கச்சி வந்தாலும் பேசமாட்டார். என் வீட்டிற்கு தோழிகள் வந்தால் ரூமுக்குள் சென்று அவர்கள் போனப்பின் தான் வெளியில் வருவார்.அப்படி நல்ல குணம் கொண்டவர் ஏன் திடீர்னு அப்படி மாறினார் என்று தெரியவில்லை. அவருக்கு யாரு என்ன சொல்லி கொடுத்தார்கள் என்று தெரியல, நான் சினிமாவில் சின்னசின்ன ரோலில் நடித்தபோது மாமியார் வீட்டில் இருந்து சப்போர்ட் வந்தது.அதுவே தாலி போட்டு, பொட்டு வைத்துக்கொண்டு ஜோடியாக நடித்தபோது என் கணவர் நடிக்க எதிர்ப்பு தெரிவித்தார். இதெல்லாம் தேவையில்லை பார்ப்பவர்கள் கேவலமாக பேசுகிறார்கள் என்று சொன்னார். அந்த விஷயத்தில் எனக்கும் கணவருக்கும் பிரச்சனை வந்தது என்று கூறினார். மேலும் என்னோட படிப்புக்கு ஒரு இடத்தில் வேலை செய்தால் 15 ஆயிரம் கொடுப்பார்கள், இப்போது நடிப்பதால் எனக்கு இரண்டு மடங்கு சம்பளம் கிடைக்கிறது.ஆடம்பரமாக வாழ வேண்டும், அது வாங்கணும், இதை வாங்கணும் என்பதற்காக நான் சினிமாவில் நடிக்க வரவில்லை. என் குழந்தைகளை கஷ்டப்படாமல் வளர்க்க வேண்டும், நல்லா படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தான் நடிக்க வந்தேன்.ஆனால் என் கணவர் அதை புரிந்து கொள்ளாமல், என்னை கஷ்டப்படுத்தும் வகையில் பேசினார். நாலு பேர் கூட போய் சம்பாதின்னு சொன்னாரு. அந்த வார்க்கைக்கு பின் எல்லாமே முடிந்துவிட்டது, இப்போது நான் என் குழந்தை அம்மாவுடன் வாழ்ந்து வருகிறேன் என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் நடிகை ரிஹானா.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version