இலங்கை
நினைவில் வைத்திருக்க வேண்டிய இடம் முள்ளிவாய்க்கால்: குமார் தர்மசேன!
நினைவில் வைத்திருக்க வேண்டிய இடம் முள்ளிவாய்க்கால்: குமார் தர்மசேன!
போட்டிகளுக்கான நடுவருமான குமார் தர்மசேன முள்ளிவாய்க்கால் பெயர் பலகைக்கு முன்னாள் நின்றபடி, ‘நினைவில் வைத்திருக்க வேண்டிய இடம்’ குறிப்பிட்டு தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.
வட மாகாணத்திற்கு சென்றுள்ள குமார் தர்மசேன கடந்த இரு தினங்களுக்கு முன்பிலிருந்து அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், காணொளிகளையும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார்.
இந்நிலையில், வீதி ஓரத்திலுள்ள முள்ளிவாய்க்கால் பெயர் பலகைக்கு முன்னாள் நின்றபடி அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை இன்று(19) பதிவிட்டுள்ளார்.
அவர் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கும் சென்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன.