கிசு கிசு

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கலாமா? தப்பா நடந்த தயாரிப்பாளர்! தப்பி ஓடிய பிக் பாஸ் பிரபலம் !

Published

on

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கலாமா? தப்பா நடந்த தயாரிப்பாளர்! தப்பி ஓடிய பிக் பாஸ் பிரபலம் !

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் ஷில்பா ஷிண்டே. பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11வது சீசனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார் ஷில்பா.டிவி சீரியல்கள் தவிர்த்து இந்தி படங்கள், வெப்தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறியிருக்கிறார். இது குறித்து ஷில்பா ஷிண்டே பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, நான் நடிக்க வந்த புதிதில் நடந்த சம்பவம் இது. நான் யார் பெயரையும் வெளியிட விரும்பவில்லை. சில உடைகளை கொடுத்து இதை அணிந்து கொண்டு நடிங்க என்றார்கள். அவர்கள் கொடுத்த உடையை நான் அணியவில்லை. இந்த காட்சியில் நான் தான் உன் பாஸ். நீ என்னை செட்யூஸ் பண்ண வேண்டும் என்றார் தயாரிப்பாளர். அவர் சொன்னபடி நடித்தேன். அந்த நேரத்தில் அவர் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார். எனக்கு பயமாகிவிட்டது. அவரை பிடித்து தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து ஓடினேன்.சின்னத்திரை, பெரியதிரையில் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் இந்த பிரச்சனை இருக்கிறது. ஆனால் அதை யாரும் வெளியே சொல்வது இல்லை என பல நடிகைகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஷில்பா ஷிண்டேவும் அதையே தான் சொல்கிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version