டி.வி

பிக் பாஸ், இந்த வாரம் கண்ணீரோடு வெளியேறும் போட்டியாளர்.. யார் பாருங்க

Published

on

பிக் பாஸ், இந்த வாரம் கண்ணீரோடு வெளியேறும் போட்டியாளர்.. யார் பாருங்க

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட்டான ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. தொடர்ந்து வெற்றிகரமாக பல சீசன்கள் ஒளிபரப்பான பிக்பாஸ் இப்போது 8வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த சீசன் மூலம் பிக்பாஸை தொகுத்து வழங்க களமிறங்கியுள்ளார் விஜய் சேதுபதி. ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக பல போட்டிகள் நடத்தப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.இந்த வாரம் கேப்டனாக மஞ்சரி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த வாரத்திற்கான நாமினேஷனில் முத்துக்குமரன், செளந்தர்யா, விஷால், ராணவ், ஜாக்குலின், அருண் பிரசாத், பவித்ரா, ரயான், தர்ஷிகா, வர்ஷினி வெங்கட், ஆனந்தி, சாச்சனா, சிவக்குமார் என மொத்தம் 13 போட்டியாளர்கள் சிக்கினர்.இதில், சிவக்குமார், சாச்சனா இருவரும் குறைந்த வாக்குகள் பெற்ற நிலையில், ஆண்கள் சிவகுமாரை நாமினேஷன் பாஸ் கொடுத்து காப்பாற்றிவிட்டார்கள்.இதனால் அடுத்தபடியாக குறைந்த வாக்குகள் பெற்று இருப்பது சாச்சனா தான். எனவே அவர் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version