கிசு கிசு

மலையாள சினிமா பாலியல் வழக்கில் சிக்கிய நிவின் பாலி! “எனக்காக நான்தான் பேச வேண்டும்…”

Published

on

மலையாள சினிமா பாலியல் வழக்கில் சிக்கிய நிவின் பாலி! “எனக்காக நான்தான் பேச வேண்டும்…”

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து நடிகைகள் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். இந்த நிலையில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி நடிகர் நிவின் பாலி பாலியல் தொந்தரவு செய்ததாக நேர்யமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் கொச்சி ரூரல் எஸ்.பி-க்கு முதலில் புகார் அளித்திருந்தார். அந்த பெண் அளித்த புகாரில், 2023-ம் ஆண்டு ஒரு வேலையாகத் துபாய்க்குச் சென்ற சமயத்தில், ஸ்ரீயா என்ற பெண் தனக்கு நிவின் பாலி-யை அறிமுகம் செய்துவைத்ததாகவும், பின்னர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித்தருவதாகக் கூறி நிவின் பாலி மற்றும் நால்வர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த இளம் பெண் தெரிவித்துள்ளார்.வழக்கைத் தொடர்ந்து நிவின் பாலி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், “எனக்கு எதிராகக் கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு என் கவனத்துக்கு வந்ததை அடுத்தே இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். இது உண்மைக்குப் புறம்பானதும், மோசமான உள்நோக்கம் கொண்டதும் ஆகும். இதன் பின்னால் செயல்படுபவர்களைச் சட்டத்துக்கு முன் கொண்டுவர எந்த எல்லைக்கும் செல்வேன். என்னைப் புரிந்துகொண்டு தொலைப்பேசி மூலமும், மெசேஜ் மூலமும் தொடர்புகொண்டவர்களுக்கு நன்றி. வாய்மை வெல்லும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.எனக்காக நான்தான் பேச வேண்டும். நாளை யாருக்கு எதிராக வேண்டுமானாலும் இதுபோன்ற குற்றச்சாட்டு கூறப்படலாம். அவர்களுக்காகவும் தான் நான் பேசுகிறேன். சினிமாவில் உள்ளவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் எதிராக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படலாம். இந்த குற்றச்சாட்டு என்னையும், என் குடும்பத்தையும் பலவகையில் பாதித்துள்ளது. இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பது உறுதி. சட்டம் சட்டத்தின்படி செயல்படட்டும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version