இலங்கை

முல்லைத்தீவில் ஆசிரியருக்கு எதிரான நடவடிக்கை:

Published

on

முல்லைத்தீவில் ஆசிரியருக்கு எதிரான நடவடிக்கை:

ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

முல்லைத்தீவு – முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி பாடசாலை ஆசிரியர்கள் கறுப்புபட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதோடு, ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்துள்ளனர்.

Advertisement

குறித்த போராட்டமானது இன்றையதினம் (08) காலை 8.00 தொடக்கம் 8.25 வரை பாடசாலை வாயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி பாடசாலை ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளும், தங்கியிருந்த வீடும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை.

Advertisement

எனவே குறித்த விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளியை கைது செய்யுமாறும், ஆசிரியருக்கு நியாயமான தீர்வினை வழங்க வேண்டும் எனவும், தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்து பாடசாலை ஆசிரியர்கள் கையில் கறுப்புபட்டி அணிந்து கல்விக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version