இலங்கை
முல்லைத் தீவில் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் வாக்குப் பெட்டிகள்
முல்லைத் தீவில் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் வாக்குப் பெட்டிகள்
நாளைய (14) இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முல்லைத்தீவு மாவட்டத்திற்கான வாக்குப்பெட்டிகள் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பத்தாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறித்த நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் இன்று காலை 7 மணிமுதல் எடுத்துசெல்லப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்திய நிலையமாக செயற்ப்பட்டுவரும் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இருந்து குறித்த வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கெடுப்பு நிலையங்களிற்கு பொலிசாரின் பாதுகாப்புடன் பேருந்துகளின் மூலம் எடுத்துச்செல்லப்பட்ட அதேவேளை முல்லைத்தீவில் 89ஆயிரத்து 889 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் தேர்தல் கடைமைகளுக்காக பொலிசார் மற்றும் ஆயிரத்து 653 அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.