சினிமா

வடிவேலு நடிச்ச படத்துல ஸ்ரேயாவை தப்பா யூஸ் பண்ணாங்க!! படக்குழுவினரை அடிக்க சென்ற தயாரிப்பாளர்..

Published

on

வடிவேலு நடிச்ச படத்துல ஸ்ரேயாவை தப்பா யூஸ் பண்ணாங்க!! படக்குழுவினரை அடிக்க சென்ற தயாரிப்பாளர்..

தமிழ் சினிமாவின் வைகைப்புயல் என்று புகழப்படும் நடிகர் வடிவேலு, சில சர்ச்சைகளிலும் சிக்கி பெயரை கெடுத்து கொண்டார். இடையில் ரெட் கார்ட் போடப்பட்டு ஒதுக்கப்பட்ட வடிவேலும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன் போன்ற படங்கள் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். தற்போது சுந்தர் சி இயக்கத்தில் நடித்தும் வருகிறார்.சமீபத்தில் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அளித்த பேட்டியொன்றில் வடிவேலு குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். வடிவெலுவை வைத்து இந்திரலோகத்தில் நா. அழகப்பன் என்ற படத்தை தயாரித்தேன். தம்பி ராமையா படத்தினை இயக்கி இருந்தார். அது ஒரு குப்பை படம் என்பதை நானே ஒத்துக்கொள்கிறேன்.படத்தில் வெறும் சத்தம் மட்டும் தான் இருந்ததே தவிர காமெடியெல்லாம் எதுவுமே இல்லை. படத்தை பார்த்துவிட்டு, என்ன படம் எடுத்து வெச்சிருக்கீங்க என்று படக்குழுவினரை அறைய போய்விட்டேன்.அதேபோல் ஸ்ரேயா சரணை அந்தப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வைத்தோம். டீசண்ட் ஆன சம்பளம் தான் வழங்கினோம். ஆனால் அந்த படத்தில் அவரையும் தப்பாக யூஸ் பண்ணிவிட்டார்கள். இப்படியெல்லாமே அந்த படத்தில் சொதப்பிவிட்டது.தம்பி ராமையாவுக்கு படம் எடுக்க தெரிவில்லை. ஒரு தவறை ஒருவன் உணர்ந்தால்தான் அவனால் முன்னேற முடியும். வடிவேலு அந்த தவறை உணராமல் இருந்ததால் தான் அவரால் இடையில் சில காலம் நடிக்க முடியாமல் போனது என்று தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version