சினிமா

வெற்றி வசந்த் – வைஷ்ணவி திருமண கொண்டாட்டம் களைகட்டியது! வைரல் வீடியோ

Published

on

வெற்றி வசந்த் – வைஷ்ணவி திருமண கொண்டாட்டம் களைகட்டியது! வைரல் வீடியோ

சின்னத் திரையில் பிரபலமான சீரியலாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் புதுமுக நடிகர்களோடு ஆரம்பிக்கப்பட்டாலும் குறுகிய நாட்களுக்குள்ளையே மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது இந்த சீரியலுக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களாக காணப்படுகின்றார்கள்.சிறகடிக்க ஆசை சீரியல் ஆரம்பிக்கப்பட்டு சமீபத்தில் தான் 500 எபிசோடுகளை கடந்தது. இதன் வெற்றி கொண்டாட்டத்தையும் பிரம்மாண்டமாக செலிபரேட் பண்ணி இருந்தார்கள். சாதாரண குடும்பத்தில் நிகழும் கதைக்களங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதோடு இதில் மூன்று இளம் ஜோடிகளின் கதையும் கொண்டு நகர்த்தப்படுகின்றது.d_i_aஅதிலும் முக்கியமாக முத்து மீனாவின் காதல், சண்டை, தொழிலில் வளர்ச்சி என சாதாரண மனிதனின் தனது வாழ்க்கையில் எதிர்நோக்கும் கஷ்டங்கள், படிப்படியாக முன்னேறும் விதம் என்பவற்றை இந்த சீரியல் அழகாக எடுத்துக்காட்டுகின்றது. இதில் முத்துவாக நடித்து பிரபலமானவர்தான் வெற்றி வசந்த்.ஆரம்பத்தில் கிடைத்த வேலை எல்லாம் பார்த்து, நடிகனாக வேண்டும் என்ற ஆசையோடு பல முயற்சிகளை செய்தார். அவருக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பாக இந்த சீரியல் காணப்படுகின்றது. தற்போது வெற்றி வசந்தை தெரியாத நபர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு இவர் பிரபலமாக காணப்படுகின்றார்.இந்த நிலையில், வெற்றி வசந்த் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் வைஷ்ணவியை காதலித்த நிலையில் அவர்களுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது, இவர்களுடைய திருமணம் நவம்பர் 28 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தற்போது திருமணத்தின்  Pre Wedding கொண்டாட்டம் நடைபெற்று வருகின்றது. இது தொடர்பில் எடுக்கப்பட்ட வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version