இலங்கை

13 வருடங்களின் பின்னர் யானைகள் கணக்கெடுப்பு

Published

on

13 வருடங்களின் பின்னர் யானைகள் கணக்கெடுப்பு

13 வருடங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று (17) ஆரம்பமாகவுள்ளது.

அனைத்து வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பங்களிப்புடன் உரிய கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தொடர்ச்சியாக 17,18,19 ஆம் திகதிகளில் இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் நாடளாவிய ரீதியில் மூவாயிரத்து 130 கணக்கெடுப்பு நிலையங்களில் யானைகள் கணக்கெடுக்கும் பணி முன்னெடுக்கவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார குறிப்பிட்டார்.

அந்த வகையில் முல்லைத்தீவு  மாவட்டத்திலும் மாங்குளம், ஒட்டுசுட்டான்,புதுக்குடியிருப்பு,வெலிஓயா ஆகிய நான்கு பிரதான தொகுதிகளின் வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பதினொரு உப பிரிவுகளின் 73 மத்திய நிலையங்களில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.  இதற்காக மாவட்டத்தில் 155 கணிப்பாளர்கள் பயன்படுத்தப்படவுள்ளனர்.

இலங்கையில் கடந்த 2011ஆம் ஆண்டு காட்டு யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன், அந்த அறிக்கையின்படி இந்த நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை ஐயாயிரத்து 878 ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version