விளையாட்டு

182 வீரர்கள் ஐ.பி.எல் ஏலத்துக்கு தெரிவு!

Published

on

182 வீரர்கள் ஐ.பி.எல் ஏலத்துக்கு தெரிவு!

கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான  ஐ.பி.எல் ஏலத்தில் 182 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவர்களுக்காக 10 அணிகள் சார்பில் 639 கோடியே 15 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்திய வீரர் ரிஷப் பண்ட் மிக அதிகபட்ச தொகையான 27 கோடி ரூபாவுக்கும் அதேசமயம்  ஐ.பி.எல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதுடைய  வீரரான பீகாரைச் சேர்ந்த 13வயதுடைய வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் அணிக்காக ஒரு கோடியே 10 லட்சம் ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

மேலும், ஒவ்வோரு அணியும் குறைந்தபட்சம் 18 வீரர்களையும் அதிகபட்சமாக 25 வீரர்களை ஏலம் எடுக்கலாம் என்றும், அதற்கு 120 கோடி ரூபா மட்டுமே செலவழிக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

10 அணிகள் சார்பில் 46 வீரர்கள் தக்கவைக்கப்பட்ட நிலையில் மொத்தம் 577 வீரர்கள் ஏலம் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version