விநோதம்
30 வயதில் முடி உதிர்தல் பிரச்சனையா? மருத்துவர் கூறும் காரணங்கள் என்ன?
30 வயதில் முடி உதிர்தல் பிரச்சனையா? மருத்துவர் கூறும் காரணங்கள் என்ன?
30 வயதில் முடி உதிர்தல் பிரச்சனை என்பது இன்றைய காலக்கட்டத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. இது வயதானதன் அறிகுறி மட்டுமல்ல. மாறிவரும் வாழ்க்கை முறை, மன உளைச்சல் மற்றும் தவறான உணவுப்பழக்கத்தின் விளைவாகவும் ஏற்படுகிறது.
முந்தைய காலத்தில் வழுக்கை என்பது முதுமையின் ஒரு பகுதியாகக் கருதப்பட்ட நிலையில், இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் தவறான முடி பராமரிப்பு முறை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்கள். இந்த சிக்கலை சரியான நேரத்தில் கண்டறிந்து சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் முடி உதிர்வை தடுக்கலாம்.
மரபணு மற்றும் வாழ்க்கை போன்றவற்றால் பெரும்பாலும் 30 வயதில் முடி உதிர தொடங்குவதாக மும்பையில் உள்ள மருத்துவர் ரிங்கி கபூர் கூறியுள்ளார். இதற்கான காரணங்களையும், இந்த சிக்கலைச் சமாளிப்பதற்கான உத்திகளையும் குறித்து அவர் கூறுவதை தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படிக்க:
உலர்ந்த மற்றும் ஊறவைத்த வால்நட் பருப்புகள்… இரண்டில் எது பெஸ்ட்…???
முடி உதிர்விற்கான காரணங்கள்:
மன அழுத்தம்: வேலையில் ஏற்படும் அழுத்தங்கள், நிதி தொடர்பான கவலைகள் மற்றும் தனிப்பட்ட பொறுப்புகள் ஆகியவை மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இது உடலின் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும். இது டெலோஜென் எஃப்ளூவியம் எனப்படும் ஒரு நிலையைத் தூண்டுகிறது. இதன் காரணமாக மயிர்கால்கள் வலுவிழந்து முடி உதிர்வு ஏற்படுகிறது.
ஊட்டச்சத்து குறைபாடு: மயிர்க்கால்கள் ஆரோக்கியமாக வளர இரும்புச்சத்து, ப்ரோடீன் , வைட்டமின் டி மற்றும் பயோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைவாக உள்ள உணவுகள் போன்றவை முடியின் வேர்களை வலுவிழக்கச் செய்து, அதிகப்படியான உதிர்தலுக்கு வழிவகுக்கிறது.
இதையும் படிக்க:
கண் ஆரோக்கியமும் கட்டுக்கதைகளும்…மருத்துவர் கூறும் 10 டிப்ஸ்கள்!
ஒழுங்கற்ற தூக்கம்: தூக்கம் என்பது தலைமுடி உட்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாததாகும். ஒழுங்கற்ற அல்லது மோசமான தூக்கமானது உடல் தன்னைத்தானே சரிசெய்து கொள்ளும் செயல்முறையை பாதிப்படைய செய்யலாம். இதனால் முடி சேதம் மற்றும் உதிர்தலுக்கு வழிவகுக்கிறது.
முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகள்:
ஆரோக்கியமான உணவு: தலைமுடி ஊட்டச்சத்துக்களால் மட்டுமே செழித்து வளரக்கூடியது. எனவே ப்ரோடீன், ஒமேகா-3, பயோட்டின் மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்களுடன் முட்டை, நட்ஸ், மீன் மற்றும் கீரைகள் போன்ற உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக சர்க்கரை நிரைட்னஹா உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து முடி உதிர்வை அதிகரிக்கிறது.
இதையும் படிக்க:
சுகரை குறைக்க உதவும் கறிவேப்பிலை விதை.. எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா..?
மன அழுத்தத்தைத் தவிர்த்தல்: மன அழுத்தம் மயிர்க்கால்களை செயலற்ற நிலைக்குத் தள்ளுகிறது. இது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். எனவே மன அழுத்தத்தைக் குறைக்க தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் மற்றும் யோகா போன்வற்றைப் பின்பற்ற வேண்டும். நடைபயிற்சி போன்ற வழக்கமான உடற்பயிற்சிகளை மேம்படுத்தலாம்.
உச்சம் தலையின் ஆரோக்கியத்தை கவனித்தல்: ஆரோக்கியமான முடியானது ஆரோக்கியமான உச்சந்தலையில் இருந்து தொடங்குகிறது. மயிர்க்கால்களின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பொடுகை நீக்க, மிதமான, சல்பேட் இல்லாத ஷாம்பூக்களைக் கொண்டு உச்சந்தலையை அடிக்கடி கழுவ வேண்டும். தேங்காய் எண்ணெய் அல்லது ஆர்கான் எண்ணெய் போன்ற ஊட்டமளிக்கும் எண்ணெய்களை கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் தூண்டப்படுவதோடு வேர்களும் வலுவடைகிறது.
ஆழ்ந்த உறக்கம்: ஆழ்ந்த உறக்கத்தின் போது உங்கள் தலைமுடி உட்பட உடலின் பல பாகங்கள் தன்னிச்சையாக சரிசெய்யப்படுகிறது. எனவே தலைமுடி வளர்வதற்கான செல்கள் மீண்டும் உருவாகவும் மயிர்க்கால்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் தினமும் இரவு 7 முதல் 8 மணிநேரம் வரை தரமான தூக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
மருத்துவரை அணுகுதல்: இயற்கை வைத்தியம் அல்லது வாழ்க்கை முறை மாற்றங்கள் பலனளிக்கவில்லை என்றால், உடனடியாக மருத்துவரை அணுகுதல் சிறந்தது.