திரை விமர்சனம்
4 வருடம் கழித்து ரீ என்றி கொடுக்கும் நஷ்ரியா! ட்ரீட்டாய் வரும் திரைப்படம்!
4 வருடம் கழித்து ரீ என்றி கொடுக்கும் நஷ்ரியா! ட்ரீட்டாய் வரும் திரைப்படம்!
அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நஸ்ரியா. ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் நடித்த முதல் படத்திலே தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து கொண்டார்.நய்யாண்டி, நேரம்,வாயை மூடி பேசவும்’, ‘திருமணம் எனும் நிக்கா’ என சில படங்களில் மட்டும் தான் நடித்தார். இருப்பினும் சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தவர். தற்போது நடிகர் பஹத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், சமீபத்திய வருடங்களாக ரீஎன்ட்ரி கொடுத்து பிஸியாக நடித்து வருகிறார்.நடிகர் பசில் ஜோசப்புடன் இணைந்து புதிய மலையாளப் படத்தில் நடித்து முடித்துள்ளார். சூக்ஷம தர்ஷினி” என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படம் வரும் நவம்பர் மாதம் 22 – ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நஸ்ரியா நடிப்பில் சுமார் 4 ஆண்டுகள் கழித்து இந்த படம் வெளியாக உள்ளது.