சினிமா
AR ரகுமான் பற்றி பேசி வீடியோ வெளியிட்ட மோகினி தே.. பலருக்கும் தரமான செருப்படி
AR ரகுமான் பற்றி பேசி வீடியோ வெளியிட்ட மோகினி தே.. பலருக்கும் தரமான செருப்படி
தமிழ் சினிமாவில் பிரபல இசை அமைப்பாளராக திகழ்ந்து வருபவர் தான் ஏ. ஆர் ரகுமான். இவரது இசைக்கு மயங்காத ரசிகர்களே இருக்க முடியாது. மெலோடி பாடல் முதல் குத்தாட்ட பாடல் வரை ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் கொடுத்து வருகின்றார்.ஆஸ்கார் விருது உட்பட பல விருதுவிற்கு சொந்தக்காரராக காணப்படும் ஏ. ஆர் ரகுமான், தமிழை மட்டும் இல்லாமல் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பலமொழிகளிலும் தனது இசையை விரிவாக்கி வருகின்றார்.இவ்வாறு புகழின் உச்சியில் காணப்படும் ஏ. ஆர் ரகுமான் வாழ்க்கையில் திடீரென புயல் வீச ஆரம்பித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஏ. ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா தான் கணவரை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனை ஏ. ஆர் ரகுமானும் உறுதி செய்து இருந்தார்.d_i_aஇவர்களுடைய விவாகரத்து யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்ததோடு ஏ. ஆர் ரகுமான் தனது விவாகரத்தை அறிவித்த ஒரு சில நேரங்களில் அவரிடம் கிட்டாரிஸ்டாக இருந்த மோகினி தேயும் தனது கணவரை விவாகரத்து பண்ணுவதாக அறிவித்தார். இது மிகப்பெரிய சர்ச்சைக்கு வழி வகுத்தது. அதன் பின்பு ஏ. ஆர் ரகுமானையும் மோகினியையும் இணைத்து பலவாறு பேசினார்கள்.இந்த நிலையில், இதுவரை அமைதியாக இருந்த மோகினி தே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஏ. ஆர் ரகுமான் எனக்கு ஒரு ரோல் மாடல். எனக்கு அவர் தந்தை மாதிரி. என்னுடைய வயதில் அவருக்கு ஒரு மகளும் உள்ளார். அவரிடம் கிட்டத்தட்ட எட்டு வருடமாக பணியாற்றி வருகிறேன். எங்களுக்குள் பரஸ்பர மரியாதை உள்ளது. விவாகரத்து என்பது வலி தரக்கூடிய விஷயம். எனவே தனி உரிமை மதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த வீடியோவில் என்னையும் ஏஆர் ரகுமானையும் இணைத்து பேசுவதை நம்ப முடியவில்லை. மக்களின் மனநிலையை பார்த்தால் வருத்தமாக உள்ளது. அவர் எனக்கு அப்பா மாதிரி என தெரிவித்துள்ளார்.