விநோதம்
Thyroid Symptoms: காரணமின்றி உடல் எடை அதிகரிக்குதா? அப்படி என்றால் உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கலாம்!
Thyroid Symptoms: காரணமின்றி உடல் எடை அதிகரிக்குதா? அப்படி என்றால் உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கலாம்!
தைராய்டு பிரச்சனையை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் தைராய்டு பிரச்சனைக்கான அறிகுறிகள் சிலவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தைராய்டு செயல்பாடுகளை பாதிக்கும் ஒரு நிலையே தைராய்டு நோய் என்று அழைக்கப்படுகிறது. தைராய்டு நோய் இரு வகைப்படும். ஹைப்போ தைராய்டிசம் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் ஆகும். தைராய்டு பிரச்சனைக்கு மருந்துகள் மூலமாக தீர்வு காணலாம். தைராய்டு நோய் பொதுவாக அனைத்து வயதினரையும் பாதிக்கிறது. கழுத்துக்கு முன்புறத்தில் பட்டாம்பூச்சி வடிவ சிறிய சுரப்பியே தைராய்டு என்று அழைக்கப்படுகிறது. இது நம்முடைய உடலில் பல்வேறு முக்கியமான செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக தைராய்டு என்பது நமது உடலின் மெட்டபாலிசம் நடைபெறும் வேகத்தை கட்டுப்படுத்துகிறது.
மெட்டபாலிசம் என்பது நமது உடலில் உணவு ஆற்றலாக மாற்றப்படுவதற்கான ஒரு செயல்முறை. நம்முடைய உடலில் உள்ள அனைத்து செல்களும் இயங்குவதற்கு ஆற்றல் தேவைப்படுகிறது. எனினும் தைராய்டு சுரப்பி சீராக இயங்காமல் போனால் செல்களுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் அது நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே, தைராய்டு பிரச்சனையை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் தைராய்டு பிரச்சனைக்கான அறிகுறிகள் சிலவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Also Read:
ஹைப்போ தைராய்டிசம் .. நீங்கள் அலட்சியம் செய்யக்கூடாத 5 அறிகுறிகள்..
மெதுவான இதய துடிப்பு
ஒரு இதயத்தால் ஒரு நிமிடத்திற்கு 60 முறை வரை துடிக்க முடியும். இது நீங்கள் செய்யும் செயல்பாட்டின் காரணமாக அதிகமாகவோ அல்லது குறையவோ செய்யலாம். ஆனால் இது மிக மோசமாக குறைவது தைராய்டு இருப்பதற்கான ஒரு அறிகுறி ஆகும்.
சோர்வு
ஒருவேளை உங்களால் அன்றாட வேலைகளை கூட சிறப்பாக செய்ய முடியாமல் எப்போதும் சோர்வாக இருப்பதாக உணர்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஹைப்போ தைராய்டிசம் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
காரணமின்றி உடல் எடை அதிகரித்தல்
தைராய்டு ஹார்மோன்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் காரணமாக, நமது உடலில் மெட்டபாலிசம் விகிதம் குறைகிறது. இதனால் தேவையில்லாமல் உடல் எடை அதிகரிக்கிறது.
அதிக உணர்த்திறன் மற்றும் குளிர்
உடலின் வெப்பநிலையை சீர்குலைக்கும் திறன் பாதிக்கப்பட்டிருந்தால் அது தைராய்டில் பிரச்சனை இருப்பதை அறிவுறுத்துகிறது.
வறண்ட சருமம்
செல் மீளுருவாக்கம் மெதுவானதன் காரணமாக சருமம் வறண்டு காணப்படுவது தைராய்டு பிரச்சனைக்கான ஒரு அறிகுறி ஆகும். மனநிலை மாற்றங்கள் நம்முடைய உடலால் டோபமைன் ஹார்மோனை வெளியிட முடியாமல் மன அழுத்தம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக மனநிலை மாற்றம் ஏற்படுகிறது. இதுவும் தைராய்டு பிரச்சனைக்கான ஒரு அறிகுறியாக கருதப்படுகிறது.
தூங்குவதில் சிக்கல்
தினமும் ஒரே நேரத்தில் தூங்க முடியாதது மற்றும் அடிக்கடி கண்களில் பிரச்சனை ஏற்படுவது தைராய்டு நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
Also Read:
மூல நோய் அறிகுறிகள் என்ன..? சரியான சிகிச்சை பெறுவது எப்படி? முழுமையான விளக்கம்.!
அரிப்பு
தைராய்டு பிரச்சனை இருக்கும் பெரும்பாலான நபர்களுக்கு அரிப்பு என்பது ஒரு பொதுவான அறிகுறி. இது ஹைப்போ தைராய்டிசம் காரணமாக ஏற்படுகிறது.
சீரற்ற மாதவிடாய்
நீண்ட அல்லது வழக்கத்தை விட அதிக மாதவிடாய் ரத்தக்கசிவு, சீரற்ற மாதவிடாய் ஆகியவை தைராய்டு பிரச்சனை காரணமாக ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்களால் உண்டான விளைவுகள் ஆகும்.