உலகம்

ஆகாய போர்ப் பயிற்சியை தொடங்கிய தைவான்!

Published

on

Loading

ஆகாய போர்ப் பயிற்சியை தொடங்கிய தைவான்!

தைவான் இராணுவம் தனது எதிர்த் தாக்குதல் திறனைச் சோதிக்க இன்றைய தினம் காலையில் விமானத் தற்காப்புப் பயிற்சியை நடத்தியது.

தைவான் அதிபர் லாய் சிங்-டே இவ்வாறு இறுதியில் அமெரிக்கா வழியாக பசிபிக் வட்டாரத்திற்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் வேளையில் அந்தத் தற்காப்புப் பயிற்சி நடைபெற்றுள்ளது.

Advertisement

அந்தப் பயணத்தை மனதில்கொண்டு இன்னும் ஒருசில நாள்களில் தைவான் அருகே இராணுவப் பயிற்சியை சீனா தொடங்கக்கூடும் என்றும் 

தைவானையும் அதனைச் சுற்றியுள்ள வட்டாரத்தையும் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள், நிலைமையை ஆராய்ந்து அந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் தைவான் தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என்றும் அதன் அதிபர் லாய் ஒரு ‘பிரிவினைவாதி’ என்றும் சீனா கூறிவருகிறது.

Advertisement

ஆனால், தைவானின் வருங்காலம் குறித்து அதன் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று அதிபர் லாய் தெரிவித்துள்ளார்.[ஒ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version