உலகம்

இந்து கோவில்கள் மீது தாக்குதல்; பதற்றத்தில் வங்கதேசம்!

Published

on

இந்து கோவில்கள் மீது தாக்குதல்; பதற்றத்தில் வங்கதேசம்!


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 27/11/2024 | Edited on 27/11/2024

வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக வெடித்த போராட்டத்தின் காரணமாக  பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாட்டை விட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், வங்கதேச நாட்டின் இடைக்கால அரசின்  தலைவராக பொறுப்பேற்றார். இருப்பினும் ஆங்காங்கே கலவரம் நடந்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இது வங்கதேசத்தையும் கடந்து பேசு பொருளாக மாறிய நிலையில் இந்தியா தனது கண்டனத்தையும் பதிவு செய்திருந்தது.

இதற்கிடையில், வங்கதேச கொடியை அவமதித்தாக கூறிய இந்து மத அமைப்பின் தலைவரான சின்மய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் நடந்த இந்து மத ஊர்வலத்தின் போது, வங்கதேசத்தின் தேசியக் கொடி அவமதித்தாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து சின்மய் கிருஷ்ண தாஸ் உள்பட 19பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று முன் தினம் (25-11-24) கைது செய்யப்பட்டார். இவரது கைதுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி நீதிமன்றத்தில்  சின்மய் கிருஷ்ண தாஸ் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனிடையே வங்கதேசத்தில் வாழும் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பை அதிகாரிகள் உறுதி செய்ய இந்தியா வலியுறுத்தியதோடு, சின்மய் கிருஷ்ண தாஸை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

Advertisement

சின்மய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து, வங்கதேசம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதே வேளையில், சட்டோகிராமில் பிரங்கி பஜாரில் உள்ள லோகோநாத் கோயில், மான்சோ மாதா கோயில், மற்றும் ஹசாரி லேனில் உள்ள காளி மாதா கோயில் ஆகிய இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக இந்து மத அமைப்பின் செய்தி தொடர்பாளர் ராதாராம் தாஸ் தெரிவிக்கையில், ‘வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் இந்து வழிபாட்டுத் தலங்கள் மீது 24×7 தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அது எப்போது நிறுத்தப்படும்?’ என்று தெரிவித்து இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார். 

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • ‘கனமழைக்கு வாய்ப்பு’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

  • ஃபெஞ்சல் புயல் – தற்போதைய நிலை என்ன?

  • நக்கீரன் 30-11-2024

  • விஜய்யிடம் பா.ஜ.க. பேரம்!

  • இறுதிச் சுற்று! 30.11.24

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version