கிசு கிசு

கணவர் வேண்டாம் என கூறியும் மீண்டும் நடிக்க வருகிறாரா சாயிஷா? என்ன நடக்குது?

Published

on

Loading

கணவர் வேண்டாம் என கூறியும் மீண்டும் நடிக்க வருகிறாரா சாயிஷா? என்ன நடக்குது?

நடிகை சாயிஷா திருமணத்திற்கு பின்னர் கிட்டத்தட்ட திரையுலகில் இருந்து விலகிய நிலையில் தற்போது அவர் மீண்டும் நடிக்க வருவதாகவும், ஆனால் அவர் நடிக்க அவரது கணவர் ஆர்யா அனுமதி மறுத்து வருவதாகவும் கோலிவுட் வதந்திகள் பரவி வருகிறது. இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான ’வனமகன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகையாக அறிமுகமானவர் சாயிஷா. அதன் பின்னர் ’கடைக்குட்டி சிங்கம்’ ’காப்பான்’ ’டெடி’ உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில் ஆர்யாவை திருமணம் செய்து கொண்ட பின் திரை உலகில் இருந்து விலகினார். அதன் பின்னர் சாயிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையை பராமரிப்பதிலேயே அவர் கவனம் செலுத்தி வந்தார் என்பதும் கடந்த ஆண்டு வெளியான சிம்புவின் ’பத்து தல’ படத்தில் மட்டும் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் திரையுலகில் ரீஎண்ட்ரி ஆவதற்காக கதை கேட்டு வருவதாகவும் சில இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்லி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் நடிகர் ஆர்யா, சாயிஷா நடிக்க வேண்டாம் என்று கூறி வருவதாகவும் கணவரின் எதிர்ப்பை மீறி சாயிஷா நடிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் ஆர்யா சம்மதத்தின் பெயரில்தான் சாயிஷா நடிக்க வருவதாகவும் ஒரு செய்தி வெளியாகி கொண்டிருக்கிறது. கணவர் ஆர்யாவின் சம்மதத்துடன் தான் சாயிஷா நடிக்க வருகிறாரா? அல்லது அவரது எதிர்ப்பையும் மீறி நடிக்க வருகிறாரா? என்பது போக போக தான் தெரிய வரும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version