சினிமா
குட் பேட் அக்லி..! ஜிவி பிரகாஷ் போட்ட டுவிட்..! கரியர் பெஸ்ட் அப்டேட்..!
குட் பேட் அக்லி..! ஜிவி பிரகாஷ் போட்ட டுவிட்..! கரியர் பெஸ்ட் அப்டேட்..!
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த விடாமுயற்சி அப்டேட் கேட்டு ரசிகர்கள் பல வேலைகளை செய்து வருகிறார்கள். அது சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி விடுகிறது. அத்தோடு அஜித்தே கடவுளே என்ற வார்த்தை ட்ரோல் மெட்டீரியலாக மாறி விட்டது. இருப்பினும் இரண்டு படங்களின் மீதுமே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆர்வம் இருக்கிறது. முக்கியமாக இளம் இயக்குநரான ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி படத்தை இயக்கிவருகிறார். இவர் ஏற்கனவே நடிகர் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி திரைப்படத்தினை இயக்கி வெற்றி பெற்றார். இதன் காரணமாக அஜித்தை எந்த மாதிரியான ஸ்டைலில் படத்தில் அவர் காண்பிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடத்தே எழுந்திருக்கிறது. அத்தோடு ஆதிக் ரவிச்சந்திரன் தீவிரமான அஜித்தின் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் குட் பேட் அக்லி பற்றி ஜிவி பிரகாஷ் கூறியிருப்பது ட்ரெண்டாகியுள்ளது.படத்தின் ஷூட்டிங் தமிழ்நாடு, ஹைதராபாத், ஸ்பெயின் உள்ளிட்ட இடங்களில் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் இப்படத்தில் திரிஷா, எஸ்.ஜே சூர்யா ஆகியோர் நடித்துள்ளார். இதற்கிடையே இந்தப் படத்துக்கு முதலில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. d_i_aஅவருக்கு பதிலாக ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் ஜிவி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது ஒரு ரசிகர், ‘குட் பேட் அக்லி படத்தின் பின்னணி இசைக்காக காத்திருக்க முடியவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு ஜிவி பிரகாஷோ, ‘கரியர் பெஸ்ட் வந்து கொண்டிருக்கிறது’ என்று கூறி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார்.