சினிமா
சட்டபூர்வ விவாகரத்து!! தங்கை வழியில் ஐஸ்வர்யா? அண்ணன் வழியில் தனுஷ்!! லீக்காகும் 2ஆம் திருமண ரகசியம்..
சட்டபூர்வ விவாகரத்து!! தங்கை வழியில் ஐஸ்வர்யா? அண்ணன் வழியில் தனுஷ்!! லீக்காகும் 2ஆம் திருமண ரகசியம்..
தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் சென்று தன் திறமையை நிரூபித்து காட்டி தற்போது இயக்குநராக அடுத்தடுத்த படங்களை இயக்கி வருபவர் தான் நடிகர் தனுஷ். இதற்கிடையில் விவாகரத்து வழக்கு, நயன் தாராவுடான வழக்குகளை சந்தித்து வந்தார்.நவம்பர் 27 ஆம் தேதி ஐஸ்வர்யா ரஜினிகாந்துடனான சட்டப்பூர்வமான விவாகரத்து தீர்ப்பு வழங்கப்பட்டது. 18 ஆண்டு திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்திருகிறது. இது ஒரு பக்கம் இருக்க விவாகரத்து வழக்கு முடிந்த நிலையில் நயன் தாரா மீது சில தினங்களுக்கு முன் தனுஷ் வழக்குபதிவு செய்துள்ளார்.இந்நிலையில் செல்வராகவன் மற்றும் செளந்தர்யாவை போல் தனுஷும் ஐஸ்வர்யாவும் இன்னொரு திருமணம் செய்து கொள்வார்களா? என்ற கேள்வி பலரின் கேள்வியாக இருந்து வருகிறது.செல்வராகவனை போல் தனுஷுக்கு அவரின் தந்தை கஸ்தூரி ராஜா இரண்டாம் கல்யாணம் செய்து வைக்க திட்டமிட்டிருப்பதாகவும் தங்களது உறவுக்காரப் பெண் ஒருவரைத்தான் தனுஷுக்கு இரண்டாவதாக மணம் முடித்து வைப்பார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.அதேபோல் ஐஸ்வர்யா இன்னொருவரை விரும்பினால் அவரை கட்டி வைக்கவோ அல்லது தாங்களே ஒரு பையனை பார்த்து 2வது திருமணம் செய்து வைக்கவேண்டும் என்ற முடிவில் ரஜினியும் லதாவும் இருப்பதாகவும் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்களாம். அண்ணன் வழியில் தனுஷும், தங்கை வழியில் ஐஸ்வர்யாவும் வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்வார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.