சினிமா

சிறகடிக்க ஆசை சீரியல் நாயகனுக்கு கோலாகலமாக நடந்த திருமணம்! வைரல் போட்டோ

Published

on

சிறகடிக்க ஆசை சீரியல் நாயகனுக்கு கோலாகலமாக நடந்த திருமணம்! வைரல் போட்டோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் காணப்படுகிறது. குறுகிய நாட்களுக்குள்ளேயே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்த ஒரு சீரியலாக இந்த சீரியல் திகழ்ந்து வருகின்றது.சிறகடிக்க ஆசை சீரியலின் கதாநாயகனாக நடித்து வருபவர் தான் வெற்றி வசந்த். இவர் முத்து என்று கேரக்டரில் நடித்து வருகின்றார். ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக பல வாய்ப்புகளுக்காக ஏங்கி நின்றார். ஆனாலும் இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.இதன் காரணத்தினால் தனக்கு கிடைத்த வேலைகள் எல்லாவற்றையும் செய்தார். இறுதியாக செக்யூரிட்டி வேலை செய்ததாகவும் இவர் தெரிவித்திருந்தார். அதன் பின்பு இவருக்கு இந்த சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்  வெற்றி வசந்த் . தற்போது வெற்றி வசந்க்கு என்று மிகப்பெரிய பேன்ஸ் பேஜ் காணப்படுகின்றது. சமீபத்தில் இவருக்கும் பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்கள் திடீரென தங்களுடைய காதலை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார்கள்.இந்த நிலையில், வெற்றி வசந்த் வைஷ்ணவியின் திருமணம் இன்றைய தினம்  கோலாகலமாக நடைபெற்று உள்ளது. தற்போது இத்தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version