கிசு கிசு

திருமணமான ஒரே வாரத்தில் கர்ப்பமா? கணவருடன் மருத்துவமனைக்கு சென்ற ரஜினி பட ஹீரோயின்..!

Published

on

திருமணமான ஒரே வாரத்தில் கர்ப்பமா? கணவருடன் மருத்துவமனைக்கு சென்ற ரஜினி பட ஹீரோயின்..!

ரஜினி படத்தில் நாயகியாக நடித்த நடிகை கடந்த வாரம் திருமணம் செய்து கொண்ட நிலையில் இன்று அவர் தனது கணவருடன் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லிங்கா’ திரைப்படத்தில் அனுஷ்கா மற்றும் சோனாக்ஷி சின்ஹா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்திருந்தனர். இதில் சோனாக்ஷி சின்ஹா அவர்களுக்கு கடந்த வாரம் திருமணம் நடந்த நிலையில் பாலிவுட் திரை உலகம் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தது. முன்னதாக சோனாக்ஷி சின்ஹா தனது தந்தையின் அனுமதியின்றி  திருமணம் செய்ய போவதாக வதந்திகள் பரவிய நிலையில் அதை அவரது மறுத்ததுடன் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருமணம் ஆகி ஒரே ஒரு வாரம் மட்டுமே ஆகியுள்ள  நிலையில் இன்று சோனாக்ஷி சின்ஹா தனது கணவருடன் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மருத்துவமனையில் இருந்து சோனாக்ஷி சின்ஹாவும், அவருடைய கணவரும் காரில் இருந்து வெளியே வரும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு சோனாக்சி சின்ஹா நான் கர்ப்பமாக இருப்பதாகவும் அதனால் தான் அவர் மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாகவும் கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது. ஏற்கனவே பாலிவுட் நடிகை அலியா பட் உள்பட ஒரு சில நடிகைகள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்துள்ள நிலையில் சோனாக்ஷி சின்ஹாவும் அதே போல் கர்ப்பமாகியுள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version