இலங்கை

தொடரும் சீரற்ற காலநிலை இரண்டு இலட்சம் பேர் பாதிப்பு!

Published

on

தொடரும் சீரற்ற காலநிலை இரண்டு இலட்சம் பேர் பாதிப்பு!

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக 17 மாவட்டங்களில் 59ஆயிரத்து 269 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து  ஏழாயிரத்து 582 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்  முகாமைத்துவ மத்திய நிலையம்தெரிவித்துள்ளது. இதில் வடக்கு இகிழக்கில் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி மத்திய மாகாணத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வடமேல் மாகாணத்தில் ஆயிரத்து 893 குடும்பங்களைச் சேர்ந்த 6ஆயிரத்து 615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சப்ரகமுவ மாகாணத்தில் 51 குடும்பங்களைச் சேர்ந்த 193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

வட மாகாணத்தில் 17ஆயிரத்து 922 குடும்பங்களைச் சேர்ந்த 62ஆயரத்து 505 பேர் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் 36 ஆயிரத்து 811 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 29ஆயிரத்து 531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென் மாகாணத்தில் 222 குடும்பங்களைச் சேர்ந்த 835 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்  மத்திய மாகாணத்தில் 150 குடும்பங்களைச் சேர்ந்த 546 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஊவா மாகாணத்தில் 477 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 861 பேரும் வடமத்திய மாகாணத்தில் ஆயிரத்து 730 குடும்பங்களைச் சேர்ந்த 5ஆயிரத்து 451 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

 ஆறு வீடுகள் முழுமையாகவும் 561 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 3ஆயிரத்து 102 குடும்பங்களைச் சேர்ந்த 10ஆயிரத்து 137 பேர் 101 பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version