வணிகம்

நல்ல மகசூலை அள்ளித் தரும் காலி ஃபிளவர் உற்பத்தி… மகிழ்ச்சி தெரிவிக்கும் விவசாயிகள்

Published

on

நல்ல மகசூலை அள்ளித் தரும் காலி ஃபிளவர் உற்பத்தி… மகிழ்ச்சி தெரிவிக்கும் விவசாயிகள்

காலிபிளவர் பயிரிடுவதன் மூலம் விவசாயிகளுக்கு சேமிப்புடன் நல்ல வருமானம் கிடைக்கும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலம் அராரியா மாவட்ட விவசாயிகள் ஒரு ஏக்கரில் காலிஃபிளவர் பயிரிடுவதன் மூலம் ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள்.

இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது- இம்முறை இரண்டு ஏக்கர் நிலத்தில் காலிபிளவர் சாகுபடி செய்கிறோம். காலிஃபிளவர் வெறும் மூன்று மாதங்களில் அதாவது 90 நாட்களில் தயாராகிவிடும். காலிஃபிளவர் விவசாயத்தில் ஒரு சீசனில் ரூ.2-3 லட்சம் வருமானம் தரும். என்று தெரிவித்தனர்.

Advertisement

தற்போது அராரியா சந்தைகளில் காலிஃபிளவர் ரூ.50-60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. சந்தையில் நல்ல விலை கிடைப்பதால், காய்கறி விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வத்துடன் முயற்சி செய்து வருகின்றனர். காலி ஃபிளவர் காய்கறி சாகுபடிக்கு அதிக பணம் தேவையில்லை.

இதுகுறித்து விவசாயி முகமது ஆசிக் என்பவர் கூறியதாவது கூறியதாவது: தொடர்ந்து காய்கறி சாகுபடி செய்து வருகிறோம். இதற்கு அதிக உழைப்பு தேவையில்லை. காலிஃபிளவர் அறுவடை செய்துவிட்டு, தற்போது முட்டைகோஸ் பயிரிடுவதால், குறைந்த காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சந்தையில் தொடர்ந்து கிராக்கி இருப்பதால், காய்கறிகளை விற்பனை செய்வதில் விவசாயிகள் சிரமப்படுவதில்லை.

அராரியா விவசாயிகளுக்கு காலிபிளவர் சாகுபடி புதிய நம்பிக்கையாக உருவாகி வருகிறது. பாரம்பரிய பயிர்களுக்கு பதிலாக காய்கறிகளை பயிரிடுவதன் மூலம் அதிக லாபம் ஈட்ட முடியும் என்பதை அராரியா விவசாயிகள் தற்போது புரிந்து கொண்டுள்ளனர். படிப்படியாக, விவசாயிகள் பாரம்பரிய விவசாயத்தை கைவிட்டு, புதிய விவசாய முறைகளை கண்டுபிடித்து வருகின்றனர். என்று தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version