டி.வி

மரணபடுக்கையில் ஊசலாடும் கோபியின் உயிர்.. காப்பாற்ற தயங்கும் பாக்கியா?

Published

on

மரணபடுக்கையில் ஊசலாடும் கோபியின் உயிர்.. காப்பாற்ற தயங்கும் பாக்கியா?

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபிக்கு  திடீரென நெஞ்சுவலி ஏற்பட அவர் ராதிகாவுக்கு கால் பண்ணுகின்றார். ஆனால் ராதிகா அவருடைய போனை பார்த்ததும் எடுக்கவில்லை. அதன் பின்பு செழியனுக்கு கமலாவுக்கு என ஒவ்வொருவருக்கும் கால் பண்ண அவர்கள் ஆன்சர் பண்ண வில்லை.இறுதியாக பாக்யாவுக்கு கால் பண்ண, அவர் போனை பார்த்ததும் ஏன் இவர் கால் பண்ணுகிறார் என்று யோசிக்கின்றார். அந்த நேரத்தில் பாக்கியாவுக்கு வாய்ஸ் மெசேஜ் போடுகின்றார் கோபி. இதனால் நீங்க எங்கே இருக்கீங்க என்று கேட்டு உடனடியாக காரில் கிளம்பிச் செல்கின்றார் பாக்யா.அங்கு கோபி சரிந்து கிடப்பதை பார்த்து அவரை எழுப்ப முயற்சிக்கின்றார். இதன் போது வந்துட்டியா பாக்கியா என்று மீண்டும் மயக்கமாக சரிகிறார் கோபி. அதன் பிறகு ஆம்புலன்ஸை வரவழைத்து கோபியை ஹாஸ்பிடலில் சேர்க்கின்றார். அதன் பிறகு எழிலுக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லுகின்றார். எழிலும் ஹாஸ்பிடலுக்கு வருகின்றார்.கோபி போன் பண்ணியதிலிருந்து ராதிகாவுக்கு கால் பண்ணுகின்றார் பாக்யா. ஆனாலும் அவர் போனை எடுக்கவில்லை வீட்டிற்குச் சென்று தட்டிய போதும் அவர்கள் எந்த பதிலும் இல்லை அதன் பின்பு தான் கோபியை பாக்கியா ஹாஸ்பிடலில் சேர்க்கின்றார். அடுத்த நாள் ஈஸ்வரி, செழியன், இனியா மூன்று பேரும் வருகின்றார்கள்.இதன்போது ஈஸ்வரி அழுது புலம்பி தான் கோபியை பார்க்க வேண்டும் என்று சொல்ல, அவருக்கு சின்ன ஆபரேஷன் பண்ண வேண்டும் என்று டாக்டர் சொல்லுகின்றார். மேலும் பாக்யாவை அதற்கு சைன் பண்ணுமாறு சொல்ல, பாக்யா உடனே ராதிகாவை  வரவைத்து சைன் பண்ணலாம் என்று சொல்லுகின்றார். ஆனாலும் ஈஸ்வரி  கோபிக்கு அவளால் தான் பிரச்சனை.. அவ வர மட்டும் என்ட பிள்ளையின்  உசுருக்கு என்ன உத்திரவாதம் நீயே சைன் பண்ணு என்று சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version