கிசு கிசு

மோகனை ஒருதலையாக காதலித்தாரா பூர்ணிமா பாக்யராஜ்? பத்திரிகையாளர் கூறிய அதிர்ச்சி தகவல்..!

Published

on

Loading

மோகனை ஒருதலையாக காதலித்தாரா பூர்ணிமா பாக்யராஜ்? பத்திரிகையாளர் கூறிய அதிர்ச்சி தகவல்..!

நடிகர் மோகனை ஒருதலையாக பூர்ணிமா பாக்யராஜ் காதலித்தார் என்றும் ஆனால் மோகன் அவரை காதலிக்கவில்லை என்பதால் அந்த காதல் அடுத்தகட்டத்திற்கு செல்லவில்லை என்றும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மோகன் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகிய இருவரும் ’கிளிஞ்சல்கள்’ என்ற திரைப்படத்தில் முதல் முறையாக ஜோடியாக நடித்தனர். அதன் பிறகு ’பயணங்கள் முடிவதில்லை’ ’அந்த சில நாட்கள்’ ’விதி’ உள்ளிட்ட சில படங்களில் இருவரும் நடித்த போதுதான் மோகனை பூர்ணிமா பாக்யராஜ் விரும்பியதாகவும்,  ஆனால் மோகன், பூர்ணிமாவை விரும்பவில்லை என்றும் அதனால் காதல் வெற்றி பெறவில்லை என்றும் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.இந்த நிலையில்  மோகனை காதலித்த ஒரு நடிகை அந்த காதல் வெற்றி பெறாததால் அவரை பழிவாங்குவதற்காக மோகனுக்கு எய்ட்ஸ் நோய் இருக்கிறது என்று வதந்தியை கிளப்பி விட்டதாகவும், அந்த வதந்தி காரணமாக தான் மோகனின் மார்க்கெட் சரிந்தது என்றும் கடந்த பல ஆண்டுகளாக ஒரு வதந்தி கூறப்படுவதுண்டு. ஆனால் இந்த வதந்தியை கிளப்பிய நடிகை யார் என்று இன்றுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் மோகன் மீதான ஒரு தலை காதல் தோல்வி அடைந்ததை அடுத்து திருமணமே வேண்டாம் என்று இருந்த பூர்ணிமாவை, பாக்யராஜ் காதலித்ததாகவும் ’டார்லிங் டார்லிங் டார்லிங்’ என்ற படத்தில் நடித்த போதுதான் காதல் ஏற்பட்டதாகவும் அதன் பிறகு பாக்யராஜ் காதலுக்கு பூர்ணிமா சம்மதம் தெரிவித்ததை அடுத்து இருவருக்கும் திருமணம் நடந்ததாகவும் அந்த மூத்த பத்திரிகையாளர் பேட்டியில் தெரிவித்துள்ளார். தற்போது பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லாமல் சில தகவல்களை கூறி வருகின்றனர். யூடியூபில் பரபரப்பாக பேட்டி கொடுத்தால் பணம் கிடைக்கும், அடுத்தடுத்து பல யூடியூபர்கள் பேட்டிக்கு அணுகுவார்கள் என்ற நோக்கத்திலும் சிலர் அந்த கால வதந்திகள் குறித்து பேட்டி அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version