இந்தியா
மோடிக்கு கொலை மிரட்டல்; மும்பையைச் சேர்ந்த பெண் கைது
மோடிக்கு கொலை மிரட்டல்; மும்பையைச் சேர்ந்த பெண் கைது
Vijay Kumar Yadavபிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்யப்போவதாக மும்பை காவல்துறைக்கு புதன்கிழமை அடையாளம் தெரியாத அழைப்பு வந்தது. 34 வயதுடைய பெண் ஒருவரைக் கைது செய்த போலீசார், மிரட்டல் அழைப்பை விடுத்ததாக கூறப்படும் பெண்ணின் பின்னணியை சரிபார்த்து வருகின்றனர்.ஆங்கிலத்தில் படிக்க: Mumbai police control room receives threat call to kill PM Modi; woman detainedகாவல்துறையின் தகவலின்படி, பிரதான காவல் கட்டுப்பாட்டு அறைக்கு காலை 9.13 மணிக்கு ஒரு பெண்ணிடமிருந்து அழைப்பு வந்தது, மோடியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறி, அதற்கு ஆயுதம் தயாராக இருப்பதாக அந்தப் பெண் கூறினார்.அழைப்பாளரின் கைப்பேசி எண்ணின் கடைசி இடம் அந்தேரியில் காட்டப்பட்டதால், அம்போலி காவல் நிலையம் உஷார்படுத்தப்பட்டது, மேலும் அழைப்பாளரைக் கண்டுபிடிக்க ஒரு போலீஸ் குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.“தொழில்நுட்ப விசாரணைக்குப் பிறகு, நாங்கள் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முயற்சித்தோம். இதற்கிடையில், அந்தப் பெண் செல்போனை சுவிட்ச் ஆன் செய்தார், மாலை கண்டிவலி பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டார். நிர்வாக அமைப்பின் மீது ஏற்பட்ட விரக்தியில் அவர் இந்த அழைப்பை செய்தார் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். அவர் எந்தக் குழுவோடும் தொடர்புடையவர் அல்ல, குற்றச் செயல்கள் எதுவும் இல்லை” என்று அம்போலி காவல்துறையின் மூத்த ஆய்வாளர் சதாசிவ் நிகம் கூறினார்.மேலும், அந்த பெண்ணிடமிருந்து கைத்தொலைபேசி மீட்கப்பட்டதாக சதாசிவ் நிகம் தெரிவித்தார்.12-ம் வகுப்பு வரை படித்த அந்த பெண் திருமணமாகாததால் வீட்டில் தனியாக வசித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது தங்கை அருகில் வசிக்கிறார்.சிறிய பிரச்சினைகளுக்கு உதவி பெற காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த வரலாறு அவருக்கு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அந்தப் பெண் கொஞ்சம் மன உளைச்சலுக்கு ஆளானவர், என்று போலீசார் தெரிவித்தனர்.”நாங்கள் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளோம், மேலும் புரளி மிரட்டல் அழைப்பில் அவரது பங்கு உறுதிசெய்யப்பட்ட பிறகு, நாங்கள் அவரை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்று பெயரிட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவர் இன்று மீண்டும் விசாரணைக்காக அழைக்கப்பட்டார்,” என்று சதாசிவ் நிகம் கூறினார்.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“