சினிமா

விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையும் த்ரிஷா.. ஸ்கிரிப்டும் ரெடியாம்..! மாஸ் அப்டேட்

Published

on

விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையும் த்ரிஷா.. ஸ்கிரிப்டும் ரெடியாம்..! மாஸ் அப்டேட்

தமிழ் சினிமாவில் பலரின் பள்ளிப் பருவக் காதலை மீண்டும் அழகாக நினைவூட்டிய திரைப்படம் தான் 96. இந்தப் படத்தில் மிகவும் எதார்த்தமாக விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் நடித்திருந்தார்கள்.2018ம் ஆண்டு வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் 96. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பலரும் தங்களுடைய பள்ளிப் பருவ நண்பர்களுடன் ரியூனியனை கொண்டாடி மகிழ்ந்தனர். இதுவே இந்த படத்துக்கு கிடைத்த வெற்றியாக காணப்படுகிறது.d_i_aஇந்த படம் விஜய் சேதுபதிக்கு மட்டும் இல்லாமல் த்ரிஷாவின் கேரியரிலும் மிகப்பெரிய திருப்புமுனையாக காணப்பட்டது. மேலும் தெலுங்கு, கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரேம்குமார் மெய்யழகன் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படமும் அமோக வரவேற்பை பெற்றது.இந்த நிலையில், இயக்குனர் பிரேம்குமாரின் அடுத்த படம் தொடர்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவர் 96 படத்தின் இரண்டாவது பாகத்தை தான் இயக்க உள்ளாராம். அந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளும் முடிவடைந்து உள்ளதாம். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.இந்த படத்தின் மூலம் மீண்டும் விஜய் சேதுபதியும் திரிஷாவும் ஜோடி சேர உள்ளார்கள். இந்த படத்திற்கு கோவிந்த் வஸந்தா இசையமைக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த படம் தொடர்பிலான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version