இந்தியா
ஃபெஞ்சல் புயல்: ஐடி நிறுவனங்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்… ஈசிஆரில் போக்குவரத்து நிறுத்தம்!
ஃபெஞ்சல் புயல்: ஐடி நிறுவனங்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்… ஈசிஆரில் போக்குவரத்து நிறுத்தம்!
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறி மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கவுள்ளது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர். விழுப்புரம். மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையுடன் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தேவைக்கேற்ப முடிவெடுக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதுபோன்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (30.11.2024) வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்த கேட்டுக்கொண்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
புயல் கரையைக் கடக்கும் போது கனமழைக்கும். புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைத் கண்டிப்பாக தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள். கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
செய்திகளைஉடனுக்குடன்பெறமின்னம்பலம்வாட்ஸப்சேனலில்இணையுங்கள்….