இந்தியா
இந்தியாவில் கடந்த 9 மாதங்களில் 3200 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 9 மாதங்களில் 3200 பேர் உயிரிழப்பு!
இந்தியாவின் அசாதாரண தட்ப வெப்பத்தின் காரணமாக கடந்த 9 மாதங்களில் 3200 பேர் உயிரிழந்திருப்பதோடு பல லட்சத்துக்கும் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் அண்மையில் வெளியிட்ட புதிய ஆய்வறிக்கையிலேயே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டின் 274 நாட்களில் 255நாட்கள் அசாதாரண தட்ப வெப்ப நிலையை இந்தியா சந்தித்துள்ளது. இதன் காரணமாக, நாடளாவிய ரீதியில் 2லட்சத்து35ஆயிரத்து862 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன் 3ஆயிரத்து238 பேர் உயிரிழந்துடன் 9ஆயிரத்து457 கால் நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் 32லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 273 நாட்களில் 235 நாட்கள் அசாதாரண தட்ப வெப்ப நிலையைச் சந்தித்தன.
இதனால், 2ஆயிரத்து923 பேர் உயிரிழந்திருப்பதோடு, 92ஆயிரத்து519 கால்நடைகள் உயிரிழந்தாகவும் 80ஆயிரத்து293 வீடுகள் சோதமடைந்துள்ளதாகவும் 18.4 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (ச)