இந்தியா
இந்திய விமான நிறுவனங்களுக்கு ஆயிரத்தைத் தாண்டவுள்ள போலி வெடிகுண்டு மிரட்டல்!
இந்திய விமான நிறுவனங்களுக்கு ஆயிரத்தைத் தாண்டவுள்ள போலி வெடிகுண்டு மிரட்டல்!
இந்தியாவின் விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு இந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் மொத்தம் 999 போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக அந்நாட்டின் துணை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் முரளிதர் மொஹோல் தெரிவித்துள்ளார்.
இது கடந்த ஆண்டில் பெறப்பட்ட அச்சுறுத்தல்களை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம் என்று அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இந்த வெடிகுண்டு மிரட்டல்களில் 500க்கும் மேற்பட்ட அச்சுறுத்தல்கள் ஒக்ரோபர் இறுதி இரண்டு வாரங்களில் பெறப்பட்டன எனவும் போலி அச்சுறுத்தல்களின் வியத்தகு அதிகரிப்பு, விமான அட்டவணையில் அழிவை ஏற்படுத்தியுள்ளது எனவும், இதனால் சேவைகளில் பரவலான இடையூறு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இந்த அச்சுறுத்தல்கள் தொடர்பில் பொலிஸார் 256 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாகவும், 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளன. (ச)