விளையாட்டு

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்த உதவி… காப்பாற்றியவர்களுக்கு ரிஷப் பண்ட் செய்த காரியம்!

Published

on

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்த உதவி… காப்பாற்றியவர்களுக்கு ரிஷப் பண்ட் செய்த காரியம்!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில் பயங்கரமான கார் விபத்து ஒன்றில் சிக்கினார். உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த விபத்து நடைபெற்றது.

சாலை விபத்து நிகழ்ந்தபோது, ரஜத் குமார் மற்றும் நிஷூ குமார் என்ற  இரு இளைஞர்கள், ரிஷப் பண்ட்டை காப்பாற்றினர். இவர்கள் இருவரும் அருகே உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வருபவர்கள் ஆவர். இவர்கள் இருவருக்கும் ரிஷப் பண்ட் யாரென்றே தெரியாது. ரிஷப் பண்ட்டை  மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

Advertisement

ஜத் குமார் மற்றும் நிஷூ குமார் ஆகிய இருவரும் செய்த உதவியை, ரிஷப் பண்ட் மறக்கவில்லை. தன்னுடைய உயிரை காப்பாற்றிய அவர்கள் இருவருக்கும், ரிஷப் பண்ட் தற்போது ஹோண்டா ஆக்டிவா  ஸ்கூட்டர்களை பரிசாக வழங்கியுள்ளார்.  ஸ்கூட்டரின் முன் பக்கத்தில் ரிஷப் பண்ட் என்றும் எழுதப்பட்டுள்ளது.

அந்த இளைஞர்கள் ரிஷப் பண்டிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும், தன்னை காப்பாற்றியவர்களுக்கு பதிலுதவி செய்வதுதான் மனிதத் தன்மை என்பதை அறிந்து இந்த உதவியை செய்துள்ளார்.ரிஷப் பண்டிடம் இருந்து கிடைத்த இந்த பரிசு,  அந்த இளைஞர்கள் வாழ்க்கைக்கும் மறக்க முடியாதபடி செய்துள்ளது.

வரும் 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் விளையாட ரிஷப் பண்டை  லக்னோ அணி 27 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

Advertisement

விபத்துக்கு பிறகு மீண்டு வந்து கடந்த சீசனில் டெல்லி அணிக்காக அவர் சிறப்பாக விளையாடினார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version