சினிமா
எப்படி இருந்த ஏ.ஆர்.ரகுமான், இப்படி ஆயிட்டாரே..! விவாகரத்துக்குப் பின் முதல் காணொலி…
எப்படி இருந்த ஏ.ஆர்.ரகுமான், இப்படி ஆயிட்டாரே..! விவாகரத்துக்குப் பின் முதல் காணொலி…
இந்த வீடியோ வைரல் பயானி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. முன்னதாக, ஏ.ஆர்.ரகுமான் தொடர்பாக சமூகவலைதள விவாதங்களுக்கு பதிலளித்த அவரது முன்னாள் மனைவி சாய்ரா பானு, ஏ.ஆர்.ரகுமான் ஓர் அற்புதமான மனிதர். அவரை நெட்டிசன்கள் நடத்தும் விதம் சரியல்ல என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி, இந்த வீடியோவில் சாய்ரா பானுவின் ஒரு கருத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு தம்பதி கடந்த 1995ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கதிஷா, ரஹிமா என்ற மகள்கள் உள்ளனர். அதேபோல் அமீன் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு தம்பதி தங்களது 29 ஆண்டு கால திருமண வாழ்க்கையை விட்டு வெளியேறுவதாக அறிவித்தனர். இது தொடர்பாக வந்தனா அசோசியேட்ஸ் சார்பில் வெளியான அறிக்கையில், “திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து சாய்ரா பானு மற்றும் அவரது கணவர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளனர். உணர்ச்சிகரமான அழுத்தத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தாலும் கூட சிரமம் மற்றும் பதற்றங்களால் இருவருக்கும் இடையே தீர்க்க முடியாத இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதை இருவரும் அறிந்துள்ளனர்.
இந்த இடைவெளியை இணைக்க யாராலும் பாலம் போல செயல்பட முடியாது. இதனால் இந்த முடிவை வலி மற்றும் வேதனையுடன் சாய்ரா பானு, ஏ.ஆர்.ரகுமான் எடுத்துள்ளனர். இந்த நேரத்தில் இருவரின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து அனைவரும் செயல்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.