சினிமா

எல்லாம் வட்டியுடன் கிடைக்கும்.. தனுஷின் டைவர்ஸை கடுமையாக விமர்சித்த நயன்தாரா!

Published

on

எல்லாம் வட்டியுடன் கிடைக்கும்.. தனுஷின் டைவர்ஸை கடுமையாக விமர்சித்த நயன்தாரா!

கோலிவுட்டில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை என்ற வகையில் அடுத்தடுத்து பல சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன. சமீபத்தில் ஏ. ஆர் ரகுமான் தனது விவாகரத்தை அறிவித்தார். அதன் பின்பு தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையில் இருந்த 20 வருட பந்தமும் முடிந்தது. இதற்கு இடையில் தனுசுக்கும் நயன்தாராவுக்கும் இடையே மனக்கசப்பும் ஏற்பட்டு இறுதியில் தனுஷ் நயன்தாரா மீது வழக்கும் தொடர்ந்து உள்ளார்.யாரடி நீ மோகினி படத்தில் தனுஷும் நயன்தாராவும் இணைந்து நடித்தார்கள். அதில் இருந்தே இருவருக்கும் இடையே நல்ல நட்பு காணப்பட்டது. தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படத்திலும் பணமே வாங்காமல் ஒரு பாடலுக்கு நயன்தாரா நடனம் ஆடி உள்ளாராம்.எனினும் இவர்களுடைய நட்பில் விரிசலை உண்டாக்கியது விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் திரைப்படமாம். இந்த படத்திற்கு நான்கு கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்ட நிலையில் நயன்தாரா மீது உள்ள காதலால் அதனை 16 கோடி வரை இழுத்துச் சென்றுள்ளார் விக்னேஷ் சிவன். இதனால் விக்னேஷ் சிவன் மீது தனுஷ் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது.இதைத்தொடர்ந்து நயன் – விக்கி திருமண காட்சிகளை வைத்து ஒரு டாக்குமென்டரி உருவானது. அதற்கு உரிய ஆவணங்களை தனுஷ் இரண்டு வருடங்களாக தரவில்லை அவருக்காக காத்திருந்தும்  அனுமதி தர மறுத்து விட்டார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார் நயன்தாரா. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பில் மௌனம் காத்த தனுஷ் இறுதியாக நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்து உள்ளார்.இந்த நிலையில், நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த போஸ்ட்  தற்போது வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் இந்த ஸ்டோரியில் தனுஷை தான் மறைமுகமாக நயன் விமர்சித்துள்ளார் என கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.அதாவது தனுஷுக்கு ஐஸ்வர்யாவுக்கும் சட்டபூர்வமாகவே விவாகரத்து ஆகிவிட்டது. இதன் போது நயன்தாரா தனது இன்ஸ்டா  பக்கத்தின் ஸ்டோரியில், பொய் சொல்லி ஒருவரின் வாழ்க்கையை நீங்கள் அழித்தீர்கள் என்றால் அதை கடனாக எடுத்துக் கொள்ளுங்கள்.. அது ஒருநாள் உங்களுக்கே வட்டியுடன் திரும்ப வரும் என்று கர்மா கூறுகிறது.. என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version