விளையாட்டு

எழுச்சி கண்ட குகேஷ்… 4-வது டிரா: உலக செஸ் சாம்பியன்ஷிப் சுவாரசியம்

Published

on

எழுச்சி கண்ட குகேஷ்… 4-வது டிரா: உலக செஸ் சாம்பியன்ஷிப் சுவாரசியம்

சர்வதேச செஸ் கூட்டமைப்பான ஃபிடே சார்பில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடக்கிறது. இந்தப் போட்டியில் கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற உலகின் நம்பர்-5 வீரரான இந்தியாவின் குகேஷ் (18) மற்றும் நடப்பு உலக சாம்பியனும், உலகின் நம்பர்-15 வீரரான சீனாவின் டிங் லிரென் (32) ஆகியோரும் மோதி வருகிறார்கள். மொத்தம் 14 சுற்று நடக்கும் இந்தப் போட்டியில், முதலில் 7.5 புள்ளி பெறும் வீரர், உலக சாம்பியன் ஆகலாம். மொத்த பரிசுத் தொகை ரூ. 21 கோடி. முதல் சுற்றை டிங் லிரென் வென்ற நிலையில், இரண்டாவது சுற்று ‘டிரா’ ஆனது. தொடர்ந்து நடந்த மூன்றாவது சுற்றில் எழுச்சி கண்ட குகேஷ் வெற்றி பெற்றார்.இந்நிலையில், நான்காவது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். விறுவிறுப்பான இப்போட்டி 42-வது நகர்த்தலில் ‘டிரா’ ஆனது. நான்கு சுற்றுகளின் முடிவில், குகேஷ் (2.0 புள்ளி), டிங் லிரென் (2.0) 2-2 என சமநிலையில் உள்ளனர். இன்று ஐந்தாவது சுற்று நடக்கிறது.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version