இந்தியா

கல்வித்துறையில் மட்டும் ரூ.1100 கோடி இழப்பு : அரசு வழக்கறிஞர்களுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!

Published

on

கல்வித்துறையில் மட்டும் ரூ.1100 கோடி இழப்பு : அரசு வழக்கறிஞர்களுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!

அமலாக்கத் துறை சம்மனை எதிர்த்த வழக்கில் அரசு வழக்கறிஞர் ஆஜராகாததால் சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

Advertisement

தொடர்ந்து கரூர், தஞ்சாவூர், அரியலூர், வேலூர், திருச்சி ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் பொதுப்பணி திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகும்படி, அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது.

இதை எதிர்த்து ஆட்சியர்கள் தரப்பிலும், அரசு தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஆட்சியர்களுக்கு அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றம் சென்றது.

Advertisement

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆட்சியர்கள் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை முன் நேரில் ஆஜரானார்கள்.

இந்தநிலையில் ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

Advertisement

அப்போது, தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மனுதாரர் என்ற முறையில் பொதுத்துறை செயலாளர் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பொதுத் துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாகூர் நேரில் ஆஜராகி இருந்தார்.

Advertisement

அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜே.ரவீந்திரன் ஆஜராகி, நேற்று யாரும் ஆஜராகததற்கு மன்னிப்புக் கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இனி அடுத்த முறை செயலாளர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்து உத்தரவிட்டனர்.

தொடர்ந்து வழக்குகளில் அரசு வழக்கறிஞர்கள் ஆஜாராவதை உறுதி செய்யுமாறு அரசு வழக்கறிஞர் ரவீந்திரனுக்கும், செயலாளருக்கும் அறிவுறுத்தினர்.

எனினும் நேற்று அரசு வழக்கறிஞர் ஆஜராகாததற்கு மீண்டும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், வழக்குகளை தேர்ந்தெடுத்து அந்த வழக்குகளில் மட்டும் ஆஜராக அரசு வழக்கறிஞர்கள் ஆர்வம் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதனால் மக்கள்தான் பாதிப்படைகின்றனர்.

Advertisement

அரசு வழக்கறிஞர்களின் இது போன்று செயல்பாட்டால், கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் மட்டும் இதுவரை அரசுக்கு சுமார் 1100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டனர்.

மக்கள் வரிப்பணத்தில் தான் தமிழக அரசு வழக்கறிஞர்களுக்கு ஊதியம் கொடுக்கப்படுகிறது என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசு ஊழியர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவது போல, அரசு வழக்கறிஞர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

தொடர்ந்து பொதுத்துறை செயலாளரின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version