விளையாட்டு

களத்திலும் சரி… ஏலத்திலும் சரி.. சென்னை அணி தான் கெத்து : காரணம் என்ன?

Published

on

களத்திலும் சரி… ஏலத்திலும் சரி.. சென்னை அணி தான் கெத்து : காரணம் என்ன?

சமீபத்தில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் நடந்தது. 182 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். அதிக தொகைக்கு ரிஷப் பண்ட் ஏலம் போனார்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற ஏலத்தில் ஒவ்வொரு ஐ.பி.எல் அணிகளின் ஏதாவது ஒரு உரிமையாளர் நேரடியாக கலந்து கொண்டார். இந்த முறை புதியதாக ஒரு உரிமையாளரும் தென்பட்டார். அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கோ உரிமையாளரான நடிகை ஜூகி சாவ்லாவின் மகள் ஜான்வி ஆவார். இவரும் ஐ.பி.எல் தொடர் ஏலத்தில் அனைவரையும் கவர்ந்தார்.

Advertisement

ஆனால், சென்னை அணி சார்பில் அதன் உரிமையாளர் சீனிவாசன் அல்லது குடும்பத்தினர் யாருமே கலந்து கொள்ளவில்லை. மாறாக, அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் உள்ளிட்டவர்கள் பங்கெடுத்து  வீரர்களை தேர்வு செய்தனர். மற்ற அணிகளில் உரிமையாளர்தான் கையை தூக்குவார்கள்,  பயிற்சியாளர்களான முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள்  அருகில் தேமெவென்று அமர்ந்திருந்தார்கள்.

ஆனால், இந்த ஏலத்தில் மற்ற அணிகளில் இருந்து சென்னை அணி மட்டுமே மாறுபட்டு இருந்தது. சி.எஸ்.கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்தான் ஏலத்தின் அனைத்து வீரர்களையும் தேர்வு செய்து வாங்கினார். ஸ்டீபன் பிளமிங்தான் கையை உயர்த்தி வீரர்களை தேர்வும் செய்தார். சென்னை அணியின் நிர்வாகம் , தங்களை போலவே தங்களது கோச், மற்றும் நிர்வாகிகளை நம்புதையே இது காட்டுவதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

ஜெட்டா ஏலத்தில் சென்னை அணி  டேவான் கான்வே(ரூ.6.25 கோடி), ரச்சின் ரவீந்திரா(ரூ.4 கோடி), நூர் அகமது(ரூ.10 கோடி), சாம் கரண்(ரூ.2.40கோடி), நாதன் எல்லிஸ்(ரூ.2 கோடி) ஜேமி ஓவர்டன்(ரூ.1.50கோடி) உள்ளிட்ட 20 வீரர்களை வாங்கியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version