இந்தியா

கழுகை இறக்கி காக்காவுடன் சண்டை?. ரஜினியை சந்தித்த சீமானை வறுத்தெடுத்த விஜயலட்சுமி!

Published

on

கழுகை இறக்கி காக்காவுடன் சண்டை?. ரஜினியை சந்தித்த சீமானை வறுத்தெடுத்த விஜயலட்சுமி!

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தது தமிழகத்தில் பெரிய கவனத்தை ஈர்த்தது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை எதிர்மறையாக விமர்சித்த நிலையில் சீமான் ரஜினியை சந்தித்திருக்கிறார்.

என்னதான் ரஜினி அரசியலே எனக்கு வேண்டாம் என்று சொன்னாலும் அந்த அரசியல் அவரை விடுவதா இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ரஜினி சீமான் சந்திப்பை பற்றி எதுவுமே பேசாமல் கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் அரசியல் தலைவர்கள்.

Advertisement

ஆனால் சீமானை நடிகை விஜயலட்சுமி சும்மாய் விடுவதா இல்லை. வீடியோ போட்டு தலைவனை வறுத்தெடுத்து இருக்கிறார். மிஸ்டர் சீமான் விஜய் வீட்டில் இவ்வளவு நாள் பிச்சை எடுத்தது எதுவும் தேறவில்லை என்று இப்போது போயஸ் கார்டனில் ரஜினி வீட்டில் பிச்சை எடுக்கிறீர்களா என ரொம்பவும் மோசமான வார்த்தைகளால் பேசியிருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் கர்நாடகத்தை சேர்ந்த ரஜினி தமிழக அரசியலுக்கு வரவே கூடாது, அவரை சட்டியில் போட்டு மிளகாய்த்தூள் உப்பு போட்டு வறுத்து பார்க்க வேண்டும் என்று சொன்னவர் தானே நீங்கள் என பழைய கதை எல்லாம் கிளப்பி விட்டிருக்கிறார்.

உண்மையை சொல்லப்போனால் ரஜினி அரசியலைப் பற்றி பெரிய அளவில் நெகடிவ் கமெண்ட்களை கொடுத்தது சீமான் தான். விஜய் உடன் பிரச்சனை என்றால் ரஜினியிடம் போய்விடுகிறார்கள், என்னை சரி கட்ட வேண்டும் என்றால் திமுகவுடன் சேர்ந்து கொள்கிறீர்கள் என சீமானை கிழித்தெடுத்திருக்கிறார்.

Advertisement

ரஜினி சீமான் சந்திப்பு சாதாரணமாக நடந்தது என மக்கள் கடந்து போயிருக்கலாம். ஆனால் நேற்று இவர்கள் இருவரும் சந்தித்த சில மணி நேரத்தில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர் சாட்டை துரைமுருகன் புலி மற்றும் கழுகு இருப்பது போல் ஒரு புகைப்படத்தை பகிர்ந்தது தான் எல்லோருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version